திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கஞ்சா, காளான் போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்த சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டுவருவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது.
இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தி ஜெயசீலன், வட்டக்கானல் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்திரம், கல்லுக்குழியைச் சேர்ந்த மாதவன், எம்.எம். தெருவைச் சேர்ந்த செல்வராஜ், நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், பூண்டியைச் சேர்ந்த குழந்தைசாமி ஆகிய ஆறு பேர் சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா விற்க முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, ஆறு பேரையும் கைது செய்த கொடைக்கானல் காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒன்றரைக் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யபட்டு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாவது மனைவி இறந்த சோகம்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!