ETV Bharat / state

நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த 4 பேர் கைது!

திண்டுக்கல்: சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி தயார் செய்து, விற்பனை செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

4-arrested-for-manufacturing-and-selling-firearms

author img

By

Published : Sep 14, 2020, 3:17 PM IST

திண்டுக்கல் பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் வட்டார காவல் ஆய்வாளர் தெய்வம், உதவி ஆய்வாளர் அழகுபாண்டி ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் சிறுமலைப்பிரிவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறுமலை அடிவாரம் மலை மாதா கோயில் செல்லும் வழியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரெண்டல்லப்பாறையைச் சேர்ந்த யோவான்(41) என்பதும், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், வட்டார காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்ததும், பட்டறையில் யோவானின் சகோதரர் ஆரோன்(45), மற்றும் தவசிமடையைச் சேர்ந்த கிருஷ்ணன்(52), நொச்சிஓடைபட்டியைச் சேர்ந்த பரதன் (48) ஆகியோருடன் சேர்ந்து திருட்டுத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து ஆரோன், கிருஷ்ணன், பரதன் ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க பயன்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்பில் ஆசிரியருக்கு ஆபாச மெசேஜ் - மாணவர், தந்தை மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.