திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்திக் (20), அசோக்குமார் (19), விஜய பாண்டியன் (20) ஆகிய மூவரும் சேர்ந்து, திண்டுக்கல் - வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் சென்றவர்களிடம் அரிவாளை காட்டி பணம் மற்றும் செல்போன்களை வழிப்பறி செய்ததாக வேடசந்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் கீழ் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவில் வழிப்பறி செய்த மூன்று பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூவரும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.