திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கனிமவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் கதவுகள் மூடப்பட்டன. இரவு 12 மணி வரை தொடர்ந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக துணை இயக்குநர் பெருமாள் மற்றும் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த திடீர் சோதனையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.