திண்டுக்கல்: அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூச்சந்தை செயல்பட்டுவருகிறது. இந்தப் பூச்சந்தைக்கு திண்டுக்கல் அருகே உள்ள கிராமங்களிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இதனிடையே தொடர் மழையின் காரணமாக மொட்டுகள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் பூச்சந்தைக்கு நாள்தோறும் குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
எனவே, பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ மூன்றாயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் அனைத்துப் பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
பூக்கள் விலை உயர்வின் காரணமாக வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட வீரர்களின் உடல்கள்