ETV Bharat / state

ஒகேனக்கலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி; இளைஞர் மரணம்; இளம்பெண்ணுக்கு சிகிச்சை! - suicide

Hogenakkal Lover suicide attempt: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்தனர். அதில், இளைஞர் உயிரிழந்த நிலையில் இளம்பெண் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

hogenakkal
ஒகேனக்கலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:28 PM IST

தருமபுரி: கர்நாடக மாநிலம் சாமுண்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி, இவர், கனகபுரா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பியுசி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று(12.09.2023) சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பர் உமேஷ் (24) ஆகியோர் ஒகேனக்கலுக்கு வந்துள்ளபர். இருவரும் ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்தனர். பின்னர், தொங்கு பாலம் கீழே காவிரி ஆற்றின் பாறைகளுக்கு இடையே அமர்ந்து தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதை பார்த்த பரிசல் ஓட்டிகள் இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறிய மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை
தற்கொலை

சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.