தர்மபுரி மாவட்டம், அரூா், தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின்கீழ் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்தத் தகவலின்பேரில், கோட்டப்பட்டி காவல் துறையினர் அங்கு விரைந்து, இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்நபர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குன்னி பகுதியைச் சார்ந்த அபிமன்னன் என்பதும், இவர் ஈரோட்டில் கூலி வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவருடைய மகன் கிளின்டன், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசுக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தொடந்து, காவல் துறையினர் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், கிளிண்டனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனா். அதனைத் தொடர்ந்து, அரூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இறந்தவரின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் உதவியுடன் முன்னதாகத் தடயங்களை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : கோயம்பேடு சந்தையில் 3 மாத குழந்தைக் கடத்தல்