ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Dec 3, 2020, 8:00 PM IST

தர்மபுரி : மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பயனாளிகளுக்கு 2.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா வழங்கினார்.

world disabled people day
world disabled people day

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கருணை இல்லத்தில், 31 பயனாளிகளுக்கு 2.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பி.கார்த்திகா வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 860 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதியான பயனாளிகள் இது போன்ற நலத்திட்டங்களைப் பெற்று தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆரணி ஆற்றங்கரையோரம் ஒதுங்கிய இளைஞர் உடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.