ETV Bharat / state

மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த 4,900 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் - இருவர் கைது! - Star Tortoises Seized - STAR TORTOISES SEIZED

மலேசிய நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 4,900 சிவப்பு காதுகள் கொண்ட நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் (File Image) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 10:11 AM IST

சென்னை: மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் வழக்கம்போல் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சுற்றுலாப் பயணிகளாக மலேசியா நாட்டிற்குச் சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். அதையடுத்து, அவர்கள் வைத்துள்ள பிளாஸ்டிக் கூடைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது, சாக்லேட், பிஸ்கட்டுகள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனாலும், சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கூடைகளை திறந்து பார்த்த போது, உள்ளே உயிருடன் சிவப்பு காது கொண்ட நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுங்க அதிகாரிகள், இருவரையும் சுங்க அலுவலக அறை ஒன்றில் அடைத்து வைத்துவிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்பத்தூர் அருகே புதரில் பதுக்கிய 500 கிலோ குட்கா பறிமுதல்!

இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். அதில், 4,900 நட்சத்திர ஆமைகள் இருந்துள்ளன. அவைகளில் 12 நட்சத்திர ஆமைகள் உயிரிழந்து கிடந்ததும், மற்ற நட்சத்திர ஆமைகளில் 19 நட்சத்திர ஆமைகள், ஆல்பினோ சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் வகையைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, கடத்தல் பயணிகள் இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல், இவைகளை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் அனைத்தும் நோய்க் கிருமிகளுடன் இருக்கலாம் எனவும், இவைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய்கள் இங்குள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவி விடும் எனத் தெரிவித்தனர்.

அதோடு, இந்தியாவில் உள்ள நீர்நிலைகளும் பாதிப்புடையும். எனவே, இவைகள் அனைத்தையும் மீண்டும் மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், மேலும் கடத்தல் பயணிகள் இருவரையும் சுங்க சட்ட விதிமுறைகள் படி கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

இதையடுத்து, சுங்க அதிகாரிகள் உயிருடன் இருந்த 4,900 சிவப்பு காதுகள் நட்சத்திர ஆமைகளை, நேற்று அதிகாலை சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானம் மூலம் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். அதோடு, உயிரிழந்த 12 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளையும் வெளியே எடுத்துச் சென்று, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீயில் எரித்து அளிக்க முடிவு செய்தனர். தற்போது கடத்தல் பயணிகள் இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.