ETV Bharat / state

தாய்ப்பால் ஊக்குவிப்பு வார விழாவை முன்னிட்டு பேரணி! - Mother Feed

தருமபுரி: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் ஊக்குவிப்பு பேரணி நடைபெற்றது.

dharmapuri
author img

By

Published : Aug 6, 2019, 5:20 PM IST

உலக தாய்ப்பால் ஊக்குவிப்பு வார விழாவை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் ஊக்குவிப்பு பேரணி நடைபெற்றது. மருத்துவமனையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி மருத்துவக் கல்லூரியில் முடிவடைந்தது. இப்பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜு தொடங்கிவைத்தார்.

இப்பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சுமார் 200 மீட்டர் சுற்றளவில் இந்தப் பேரணி நடைபெற்றது.

தருமபுரி
தாய்ப்பால் ஊக்குவிப்பு வார விழா பேரணி

இதைப்போல் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பிலும் உலக தாய்ப்பால் வாரவிழா கன்னங்குறிச்சி அங்கன்வாடி மையத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

தாய்ப்பால் ஊக்குவிப்பு வார விழா பேரணி
இந்த விழாவில், ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பிறகு கட்டாயம் இணை உணவு வழங்க தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 'போஷன் அபியான் அமுது' ஊட்டல் நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். குழந்தைகளுக்கு இணை உணவு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் இளம் தாய்மார்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,'தாய்ப்பால் முதல் உணவு . அதனையடுத்து ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கு, இணை உணவுகள் கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாக குழந்தைகள் நன்கு வளரும்' என்றார்.

Intro:tn_dpi_01_thaipall_varavila _vis_7204444

Body:tn_dpi_01_thaipall_varavila _vis_7204444

Conclusion:

தாய்ப்பால் ஊக்குவிப்பில் வார விழா அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பேரணி. தாய்ப்பால் ஊக்குவிப்பு வாரவிழாவை முன்னிட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் ஊக்குவிப்பில் பேரணி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கி மருத்துவ கல்லூரியில் முடிவடைந்தது.இப்பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜு தொடங்கி வைத்தார். இப்பேரணியில்  மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையில் இருந்து பேரணியாக நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணி என்பது பொது மக்களுக்கான விழிப்புணர்வாக இல்லாமல் பேரணி செய்ய வேண்டிய கடமை எனக் கருதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி மருத்துவக் கல்லூரியில்   முடிவடைந்தது. சுமார் 200 மீட்டர் சுற்றளவில் இந்த பேரணி நடைபெற்றது.பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள் நடத்துவது வழக்கம் ஆனால் இன்று நடைபெற்ற பேரணியானது மருத்துவ கல்லூரி ஆவணத்திற்காக நடத்தப்பட்ட பேரணி போன்று அவர்களுக்கு அவர்களாகவே புகைப்படம் எடுத்துக்கொண்டு பேரணியை துவக்கி வைத்து அவர்களாகவே முடித்து வைத்துக் கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.