தருமபுரி: பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம், கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், சொக்கன்கொட்டாய், நல்லூர், பாவளி, ஆத்துக்கொட்டாய், கண்சால்பெல், சீரண்டபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
மொரப்பூர் காப்புகாடு பகுதியில் இருந்து தினந்தோறும் இரவு நேரங்களில் வெளிவரும் 3 காட்டுயானைகள் மற்றும் ஒரு குட்டி யானை விவசாய நிலங்களில் உள்ள நெல், தக்காளி, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்துகின்றன. இதனால் கிராம மக்களே முன்வந்து தீப்பந்தம் ஏந்தி இரவு நேரத்தில் யானையை விரட்டும் பணியில் மேற்கொண்டு வருவதாகவும், வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு வருவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கால்வாயில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து