தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாலக்கோடு அருகே உள்ள எருதுகூட அள்ளியை சேர்ந்த சத்தியா (24) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மனைவியின் மீது சந்தேகப்பட்ட முருகன், சத்தியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்தியா கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சந்தியாவின் உடலை கைப்பற்றி, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : போலி மருத்துவரால் பார்வையை இழந்த பெண்: மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்குமா?