தருமபுரி மாவட்டம் வெயிலின் தாக்கத்தால் தற்போது கடுமையான வறட்சியை சந்தித்துவருகிறது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை மாவட்டம் முழுவதும் கடுமையாக வாட்டிவதைக்கிறது.
இந்நிலையில் செட்டிக் கரை அருகில் உள்ள பனந்தோப்பு என்ற பகுதிக்கும் டீக்கடை பேருந்து நிலையத்திற்கும் இடையில் உள்ள ஆற்று ஓடையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயிலிருந்து, அழுத்தத்தின் காரணமாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்த உபரி நீரை செட்டிக்கரை, குரும்பட்டி, சின்ன குரும்பட்டி, முட்டையன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது இந்த உபரி நீர்தான் தங்கள் தாகத்தை தீர்த்து வருகிறது என அப்பகுதி மக்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
மேலும் தருமபுரி மாவட்ட நிர்வாகம், இதில் தலையிட்டு தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.