தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து நேற்று (ஜூலை.17) ஆறாயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை.18) காலை நிலவரப்படி நான்காயிரம் கனஅடி நீர் உயர்ந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து இரண்டாயிரத்து 342 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 14 ஆயிரத்து 688 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்து இன்று (ஜூலை.18) நன்பகலில் மேலும் உயர்ந்து 15 ஆயிரம் கனஅடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதையும் படிங்க: உருவாகிறது புதிய புயல் - மக்களே உஷார்