தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் குடகு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதன் காரணமாக கர்நாடகா கபினி அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 2,476 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
காவிரி ஆற்றில் 20 ஆயிரத்து 426 கனஅடி திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து இன்று 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு செல்லும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது'