ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் - திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல் - tamilnadu day

தருமபுரி: கர்நாடகா மாநிலத்திற்கு தனிக்கொடி இருப்பது போலத் தமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

vck demand separate flag for tamilnadu
author img

By

Published : Nov 2, 2019, 7:52 PM IST

Updated : Nov 2, 2019, 8:01 PM IST

மெட்ராஸ் மாகாணத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில தினங்களாகக் கொண்டாடிவருகின்றனர். இந்தவரிசையில் நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும், அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனிக் கொடியை ஏற்றி மாநில தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதுபோல, தமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும்.

தமிழ்நாடு நாள் கொண்டாடும் அதே வேளையில் தமிழ்நாடு எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் தியாகத்தை நாம் நினைவு கூற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்

மேலும், அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும். அவருடைய நினைவு தினத்தை அரசு வீரவணக்க நிகழ்வாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பஞ்சமி நிலங்களை மீட்கவும், பஞ்சமி நிலங்களைக் கணக்கெடுக்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆணையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ஆணையத்தைச் செயல்படுத்தி விரைவில் இப்பிரச்னையைத் தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வளவு நாள் பஞ்சமி நிலம் குறித்துப் பேசாத எச். ராஜா, ராமதாஸ் போன்றவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும், திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்குவதற்கும் தற்போது பஞ்சமி நிலம் குறித்துப் பேசி வருகிறார்கள்.

ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக பஞ்சமி நிலம் குறித்து பேசுகிறார்-திருமா

மேலும் உள்ளாட்சித் தேர்தலைத் நடத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுகிறது. இவ்வளவு காலம் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாதது சட்டவிரோதமான செயல். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் கட்சி தெரிவித்து வருகிறது. இந்த முறையாவது அவர்கள் கூறியது போல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் "என்றார்.

இதையும் படிங்க: 'மொழிவாரி மாநிலமும், தமிழ்நாடு பெயர் மாற்றமும்' - முத்தரசன், வீரமணி பேச்சு!

Intro:tn_dpi_01_vck_thiruavalavan_pressmeet_vis_byte_7204444Body:tn_dpi_01_vck_thiruavalavan_pressmeet_vis_byte_7204444Conclusion:தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி,

தமிழக அரசு மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போல், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விரைவாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சிகிறது. ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாளினை அந்த மாநில தினங்களாக கொண்டாடி வருகின்றனர். இந்த வரிசையில் நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர் இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனார் அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும். மேலும் அக்டோபர் 13-ம் தேதி அவருடைய நினைவு தினத்தில் அரசு வீரவணக்க விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கவும், கணக்கெடுக்க வேண்டும் என, ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி இதற்கான கமிஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை செயல்படுத்தி விரைவில் இப்பிரச்சனையை தீர்க்க முதல்வர் நடவடிக்டை எடுக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக, பஞ்சமி நிலத்தை பற்றி பேசாமல் இருந்த ராமதாஸ், எச்.ராஜா போன்றோர் திமுகவை சீண்டுகின்றனர். இது அரசியல் ஆதாயத்திற்காகவும், திமுக கூட்டணியில் வேண்டுமென்று சலசலப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை தமிழகத்தில் நடத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த முறையாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப 6 மாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. ஆனால் இவ்வளவு ஆண்டுகள் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தாது சட்ட விரோதமான செயல். இது கண்டிக்கத்தக்கது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் கட்சியை தெரிவித்து வருகிறது. இந்த முறையாவது அவர்கள் கூறியது போல உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.

மத்திய அரசு மும்மொழி கொள்கை யில் மூன்றாவது மொழியை விருப்பம் மொழியாகத்தான் செயல்படுத்துவதாக தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில், 10 ஆண்டுகளுக்குள் இந்தியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பேசுகின்ற வகையில், அவர்களது தாய்மொழியை விட இந்தியை பேசவேண்டும் என்பதற்காக, அரசியல் கொள்கையாக மத்திய செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என திருமாவளவன் தெரிவித்தார்.
Last Updated : Nov 2, 2019, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.