ETV Bharat / state

முலாம்பழம் ஏற்றிச் சென்ற வேன் எதிரே வந்த லாரிமீது மோதி விபத்து- 2 பேர் பலி - தருமபுரியில் லாரிமீது வேன் மோதி விபத்து

தருமபுரி: கிருஷ்ணகிரியிலிருந்து முலாம்பழம் ஏற்றிச்சென்ற வேன், தருமபுரி சவுளுர் மேம்பாலம் அருகே வந்தபோது நிலைதடுமாறி எதிரே வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேன் ஓட்டுநர், கிளீனர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Dharmapuri NH
author img

By

Published : Mar 25, 2019, 5:19 PM IST

தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் முலாம்பழம்ஏற்றிவந்த வேன் ஒன்று நிலைதடுமாறி, எதிரே வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர், கிளீனர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி காவல் துறையினர் உடனடியாக இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேன் ஓட்டுநர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் ரமேஷ் (30) என்பதும், கிளீனர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கரா (20) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் நேற்று (மார்ச் 24) இரவு கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து முலாம்பழம் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும், தருமபுரி சவுளுர் மேம்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு முன்பு வேன் வந்தபோது, நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்தது.

இது குறித்து டவுன் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முழாம்பழம் ஏற்றி சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து டிரைவர்-கிளினிர் இருவரும் பலி . தருமபுரி அருகே முழாம்பழம்  ஏற்றி சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் டிரைவர்-கிளினிர் இருவரும் பலியானார்கள். ஆந்திரா மாநிலம் சித்தூர் பண சுமான குட்டை பகுதியைச் சேர்ந்தவர்நாராயணன் இவரது மகன் ரமேஷ் வயது 30 பிக் கப் வேன் டிரைவர்.இவர் நேற்று இரவு கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து முலாம்பழம் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.வேன் கிளினராக அதே பகுதியை சேர்ந்த சங்கரா 20.என்பவரும் வேனில் இருந்தார்.வேன் தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.விடியற்காலை ஒரு மணி அளவில் சவுளுர் மேம்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு முன்பு வேன் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் வேன் டிரைவர் ரமேஷ்,கிளினிர் சங்கரா இருவரும் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக தர்மபுரி டவுன் போலீசார் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.