தர்மபுரி நகராட்சி மக்கள், நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்; கரோனா பரவல் அதிகம் உள்ளதால் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என, தர்மபுரி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
இதுதொடர்பாக, தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஸ்வரன், நகராட்சி ஆணையரைச் சந்தித்து பொது மக்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் அனைத்து மக்களுக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; கழிவுநீர் கால்வாயைத் தூர்வாரி பராமரிக்க வேண்டும்; தொற்று பாதித்த பகுதிகளில் முன்னுரிமை கொடுத்து தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என, அலுவலர்களை சட்டப்பேரவை உறுப்பினர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு!