ETV Bharat / state

“நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டியடிக்க வேண்டும்” - உதயநிதி ஸ்டாலின் - ராகுல் காந்தி எம்பி

Udhayanidhi Stalin: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அடிமைகளையும், அவர்களின் எஜமானர்களையும் விரட்டுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 6:17 PM IST

தருமபுரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

தருமபுரி: காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் திமுக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று (செப்.26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது சிறப்புரையாற்றிய அவர், 'வரும் டிசம்பரில் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநாடு வெற்றி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இதே எழுச்சியோடு, சேலம் மாநாட்டை வெற்றி பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கருணாநிதி நூற்றாண்டில் நடக்கும் மாநாடு என்பதால், இது மிகப்பெரிய சிறப்பானதாக அமையும். தருமபுரி மாவட்டம் என்பது சாதாரண மாவட்டம் இல்லை. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது. இந்த மாவட்டத்தில்தான், 1965 -இல் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் (Anti-Hindi movement) ஈடுபட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அண்ணா கருணாநிதியைப் பார்க்கச் சென்றபோது, அண்ணாவிடம் கருணாநிதி கேட்டது குடும்பத்தை பற்றி இல்லை. தருமபுரி எப்படி இருக்கிறது? தருமபுரி இடைத்தேர்தல் எப்படி இருக்கு? என்று கேட்டறிந்துள்ளார். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று, இந்த முறை மாபெரும் வெற்றி பெற வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோட்டை விட்ட மாதிரி, கோட்டை விடக்கூடாது' எனத் தெரிவித்தார்.

உழைப்பால் முதலமைச்சரானவர் ஸ்டாலின்; யார் காலிலும் விழாதவர்: மேலும் பேசிய அவர், 'இளைஞரணியைச் சேர்ந்தவர்கள்தான் சிறந்த செயல் வீரர்கள். உழைத்தால் யாராக இருந்தாலும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணிதான் சாட்சி‌. அதற்கு சிறந்த உதாரணம் முதலமைச்சர்தான். கருணாநிதியே சொல்லியிருக்கிறார். உழைப்பு என்றால், ஸ்டாலின் என்று.

முதலமைச்சர் படிப்படியாக உழைத்து, முதலமைச்சராக வந்தவர். யாருடைய காலிலும் விழுந்து முதலமைச்சராகவில்லை' என்று விமர்சித்தார். 'இளைஞரணியில் நன்றாக உழைத்தவர்களுக்கு பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உழைப்பவர்களை தேடித் தேடி பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவில் எத்தனையோ அணிகள் இருக்கிறது. எதை கொடுத்தாலும், வெற்றிகரமாக முடித்து கொடுப்பது இளைஞரணிதான்.

சேலம் திமுக இளைஞரணி மாநாடு: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞரணிக்கு அளித்த 3 பணிகளைச் செய்து வருகிறோம். சேலம் மாநாட்டில், திமுக இயக்கத்தின் கொள்கைகள், சாதனைகளை சொல்லப்போகிறோம். ஆனால், மதுரையில் நடைபெற்ற மாநாடு குறித்து நான் சொல்லத் தேவையில்லை.

அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், ஏன் கலந்து கொண்டோம் என்றும், நடத்தியவர்களுக்கும் ஏன் நடத்தினோம் என்றும் தெரியவில்லை. இதில் கொள்கை பற்றி பேசவில்லை. அடுத்த நாள் ஊடகங்களில் விவாதம், அங்கு பேசப்பட்ட கொள்கைகள் குறித்து அல்ல, புளிசாதம் குறித்துதான். சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு குடும்பத்துடன் அனைவரும் வர வேண்டும். நம் கட்சி வரலாறு, கொள்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தது 'காலை உணவுத் திட்டம்': நாம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் நான்கினை, இளைஞர்கள் மனதில் வைத்துக் கொண்டு, உறவினர்கள், கிராமத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். முதலமைச்சராக தலைவர் (ஸ்டாலின்) போட்ட முதல் கையெழுத்து 'மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம்' உள்ளிட்டவை வழங்கியுள்ளார். அதற்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட 'காலை உணவுத் திட்டம்' எனக்கு மிகவும் பிடித்த திட்டம்.

குளறுபடியில் கூட்டணி; அதிமுக-பாஜக நாடகம்: இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி 'மகளிர் உரிமைத் திட்டம்'. இதனால் மகளிர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தெரியாமல் அதிமுகவும், பாஜகவும் குழம்பி போய், மக்களை குழப்பி விட்டுள்ளனர். இன்று புதுப் பிரச்னை. காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். நான்கு முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளனர். அதிமுக என்றால் இது அமித்ஷா திமுக. இவர் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள், ஓட்டுப்பிச்சை எடுக்க. ஒருவர் திருடன், ஒருவர் கொள்ளைக்காரன்.

மோடி, அதானி ஆகியோரின் பயணம்: திமுக ஆட்சிக்கு வந்ததும், கருணாநிதி குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமாம், கருணாநிதியின் குடும்பம்தான், திமுக என்கிற தமிழ்நாடெங்கும் உள்ள மக்களின் குடும்பம்தான் பிழைக்கிறது. ஆனால், உங்களால் அதானி குடும்பம்தான் பிழைத்திருக்கிறது‌. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதை புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் எனக் கேட்டார். ஆனால், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவர் உச்ச நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார்.

அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் துரத்துவோம்: இதுதான் 'இந்தியா' கூட்டணிக்கான (I.N.D.I.A. Alliance) வெற்றி. வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் 'கொள்கை கூட்டம்' என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அக்.14-இல் திமுக மகளிர் உரிமை மாநாடு.. சோனியா காந்தி பங்கேற்பதாக கனிமொழி அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.