ETV Bharat / state

தருமபுரி அருகே திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் பலி! - பட்டாசு விபத்து

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே திருவிழாவில், பட்டாசு வெடித்த போது, நிகழ்ந்த விபத்தில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Horror in Dharmapuri - fireworks blast kills 2
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே திருவிழாவில் விபரீதம் - பட்டாசு வெடித்து சிறுவன் உட்பட 2 பேர் பலி
author img

By

Published : May 24, 2023, 10:44 AM IST

தருமபுரி: மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 23) இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி விக்கிரகத்தை அலங்கரித்து மினி சரக்கு வாகனத்தில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

மினி லாரியை அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராகவேந்திரன் (வயது 26) என்பவர் ஓட்டி சென்றார். சாமி வீதி உலா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, வான வேடிக்கைகள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர்கள், சிறுவர்கள் என ஒன்றுகூடி பட்டாசுகள் வெடித்தனர்.

மேலும் அதிகளவிலான பட்டாசுகளை வெடிப்பதற்காக, பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை, மினி சரக்கு வாகனத்தில் வைத்திருந்தனர். ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பட்டாசு, அருகே இருந்த மின் கம்பத்தில் பட்டு மீண்டும் டாட்டா ஏசி மினி லாரியில் விழுந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.டாடா ஏஸ் வாகனமும், தீப்பற்றி எரிந்தது.

இதில் ஓட்டுநர் ராகவேந்திரன்,நொச்சிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஆதி(50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அங்குத் திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அசோகன் என்பவரது மகன் ஆகாஷ்(7)என்ற சிறுவன் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.அங்குச் சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து மொரப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோயில் திருவிழாவில், பட்டாசு விபத்து நிகழ்ந்து 2 பேர் பலியான சம்பவம், பள்ளிப்பட்டி பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல செய்தி! உங்கள் ராசிக்கு என்ன பலன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.