ETV Bharat / state

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது! - டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி

தருமபுரி: டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Two arrested for money laundering
Two arrested for money laundering
author img

By

Published : Feb 5, 2020, 12:00 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம் இதே காரணத்தைக் கூறி ஒவ்வொருவரிடமும் 7 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் வேலையையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் தராமல் ஆறுமாதங்களுக்கு மேலாக ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மல்லபாடி கிராமத்திலிருந்த ஷீலா, திருமால் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகன், அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக நாகராஜ் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது

Intro:தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 1 கோடிக்கு மேல் மோசடி இருவர் கைது, அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு
Body:தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 1 கோடிக்கு மேல் மோசடி இருவர் கைது, அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு
Conclusion:தர்மபுரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 1 கோடிக்கு மேல் மோசடி இருவர் கைது, அரசு பஸ் டிரைவர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி . கடகத்தூர். செல்லியம்பட்டி உ.ள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் வயது 42 அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் மற்றும் அதே ஊரை சேர்ந்த பெருமாள் மகன் திருமால் வயது 25 ஆகிய 4 பேரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 குரூப் 2 குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைத்து அரசு பணி வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ஐந்து லட்சம் 7 லட்சம் 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர் .
கடந்த ஆறு மாதங்களாக பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப தாருங்கள் என்று பலமுறை பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அவர்கள் பணமும் கொடுக்கவில்லை .வேலை வாங்கித் தரவில்லை.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் அவர்களிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து மல்லபாடி கிராமத்தில் இருந்த ஷீலா மற்றும் திருமால் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அரசு பஸ் டிரைவர் முருகன் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் இவருக்கு ஆதரவாக செயற்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடிசேர்ந்த சட்ட குரல் எனும் புத்தகத்தில் நிருபராக பணியாற்றி வரும் நாகராஜ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பல் ஏழை மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து டி.என்.பி.எஸ்.சி தோ்வு எழுதி நுழைவு சீட்டு மற்றும் ஒரிஜினல் படிப்பு சான்றிதல் வழங்கினால் வேலை பெற்று தருவதாக படிக்க தெரியாத கிராம மக்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பெற்றுள்ளனா். மோசடி நபா்கள் பணத்தை வங்கிகள் மூலம் பெற்றுள்ளனா். மாற்றுதிறனாளி ஒருவரின் தாயார் தனது தாலியை விற்று பணம் கொடுத்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.