தர்மபுரி:Christmas holidays:தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது.
அருவியில் குளிக்கத்தடை
இன்று(டிச25) கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிறு விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்தனர். தர்மபுரி ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்வதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் மசாஜ் செய்தும் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர். கடந்த இரு வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி இருந்த ஒகேனக்கல் இன்று சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தது.
தமிழ்நாட்டில் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கரோனா பரவலைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் குளிக்கத் தடை நீட்டித்திருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நீர்வரத்து தற்போது 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பட்டா மாற்ற தாசில்தாருக்கு லஞ்சம், தனக்கு இச்சை - ஏமாற்றிய சர்வேயர்? - பெண் கண்ணீர் மல்க மனு