ETV Bharat / state

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தர்மபுரி: ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து சரிவடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை  குறைந்துள்ளது.

hogenakkal falls
author img

By

Published : Jun 27, 2019, 7:36 PM IST

தர்மபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக ஒகேனக்கல் விளங்குகிறது. கர்நாடக அணைகளில் இருந்து வரக்கூடிய உபரிநீர் ஒகேனக்கல் வழியாகவே மேட்டூர் அணை சென்றடைகிறது. இந்நிலையில், தற்போது ஒகேனக்கல் வரக்கூடிய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதால் அருவிகளில் குறைந்த அளவிலான நீரே கொட்டுகிறது. அதுதவிர மற்ற இடங்கள் அனைத்தும் பாறைகளாக காட்சியளிக்கின்றன.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஏமாற்றம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் சுமார் 50 ஆயிரம் கனஅடி வரை ஒகேனக்கல்லுக்கு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் ஓனேகல்லுக்கான நீர்வரத்து 500 அடிக்கும் குறைவாகவே உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

Intro:TN_DPI_01_27_HOGANAKKAL LOW WATER COME_VIS_BYTE_P2C_7204444

Body:TN_DPI_01_27_HOGANAKKAL LOW WATER COME_VIS_BYTE_P2C_7204444

Conclusion:ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து சரிவு சுற்றுலா பயணிகள் வருகை  குறைந்தது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில்  நீர்வரத்து குறைவு காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.தர்மபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒகேனக்கல் கர்நாடக அணைகளில் இருந்து வரக்கூடிய உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணை சென்றடைகிறது.தற்போது ஒகேனக்கல் வரக்கூடிய தண்ணீரின் அளவு மிகவும் குறைவு காரணமாக அருவிகளில் மட்டும் குறைந்த அளவு நீர் கொட்டுகிறது மற்ற இடங்களில் பாறைகளாக காட்சியளிக்கிறது.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள்  நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஏமாற்றம் அடைந்தனர்.சென்ற 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் சுமார் 50 ஆயிரம் கனஅடி வரை ஒகேனக்கல்லுக்கு வந்தது.இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடாததால் நீர்வரத்து 500 அடிக்கும் குறைவாக உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டதை போல் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு உயரும் இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து டெல்டா விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.