தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்குப் பின் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், தருமபுரியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்த அவரது உதவியாளர் ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சா் அன்பழகன் கடைசியாக தருமபுரியில் 12 நாள்களுக்கு முன்னர்தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு?