ETV Bharat / state

துணி காயபோட சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன், அத்தை என 3 பேர் பலி! - மின்சாரம்

காரிமங்கலம் பகுதியில் துணியை காய போட கம்பியை தொட்டவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இவரை காப்பாற்றச் சென்ற இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

electric shock death
மின்சாரம் பாய்ந்து தாய், மகன், அத்தை என 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
author img

By

Published : Aug 11, 2023, 11:31 AM IST

துணி காயபோட சென்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன், அத்தை என 3 பேர் பலி!

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட உடைந்தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவர், இன்று (ஆகஸ்ட் 11) காலை தனது வீட்டிற்கு வெளியே இருந்த கம்பில் துணியை காய வைப்பதற்காக கம்பியைத் தொட்டபோது அதில் பாய்ந்த மின்சாரமானது சரோஜாவை தாக்கியுள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாதம்மாள், சரோஜாவை மீட்க அவரை பிடித்து இழுத்தார். ஆனால், மாதம்மாள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சரோஜாவின் மகன் பெருமாள், தாய் மற்றும் அத்தையை மீட்க முயற்சி செய்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உடல் அசைவற்று இருந்துள்ளனர்.

மேலும், இதைக்கண்டு பதறி போய் வந்த அக்கம் பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இத் தகவலறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு காரிமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:9ம் வகுப்பு இளம் விஞ்ஞானி.. குறைந்த விலையில் பேட்டரி சைக்கிள் தயாரித்து சாதனை..

உடனடியாக, சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் உடல்களை பரிசோதனை செய்து பார்க்கையில், மூவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மூவரது உடல்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், சரோஜா வீட்டிற்கு அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து வந்த கம்பியானது சரோஜா வீட்டு கூரையுடன் இணைத்து கட்டப்பட்டிருந்ததும் மேலும், தெரு விளக்குக்காக அமைக்கப்பட்ட சுவிட்ச் ஒயரிலிருந்து மின்சாரம் கம்பியின் மீது பட்டதில் கம்பியை தொட்ட மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த இரு தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக ஒயர் மற்றும் கம்பிகள் ஈரமாக இருந்ததால் கம்பியில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:என்ஐடி நேரடி பணி நியமன விவகாரம்: செயலர் சுற்றறிக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.