ETV Bharat / state

’தொப்பூர் கணவாய்’ பகுதியில் தொடரும் விபத்துகள்: லாரி மோதி 3 பேர் பலி! - மூன்று பேர் உயிரிழப்பு

தர்மபுரியை அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூன்று பேர் உயிரிழப்பு
மூன்று பேர் உயிரிழப்பு
author img

By

Published : Jun 17, 2021, 11:18 PM IST

தர்மபுரி: கரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் சேலத்திலிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு மது வாங்க தினந்தோறும் ஆயிரக்கான மதுப்பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைக்கு, சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர், நான்கு இருசக்கர வாகனங்களில் சென்று, தொப்பூர் எல்லைப் பகுதி அரசு மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு, தேவையான அளவு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

அப்போது திரும்பும் வழியில், தொப்பூர் கணவாய் பகுதியில் இரு லாரிகளுக்கு நடுவே அவர்கள் சென்றபோது, லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பயணத்தில் இருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், அதில் சென்றவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த சேர்ந்த செல்வராஜ், சுவாமிநாதன், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றி தொப்பூர் காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர்கள் ஜகதீஸ்வரன், ஈஸ்வரன் ஆகியோர் பலத்த படுகாயமடைந்தனர். இவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Battlegrounds Mobile India: முகத்தில் மரு வைத்து வரும் பப்ஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.