ETV Bharat / state

தர்மபுரி அருகே வயதான தம்பதி கொலையில் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது - வயதான தம்பதி கொலையில் கல்லூரி மாணவர்கள் கைது

தர்மபுரி அருகே வயதான தம்பதி கொலையில் கல்லூரி மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், அதிமுக ஐடி விங் (தொழில்நுட்ப அணி) பொறுப்பாளரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐவருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கல்

author img

By

Published : Jul 17, 2021, 3:52 PM IST

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (80), அவரது மனைவி சுலோச்சனா (75). இவர்கள் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள். இவரது பிள்ளைகள் திருமணமாகி சேலத்தில் வசித்துவருகின்றனர்.

வயதான தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்தபோது கடந்த 12ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர். கொலை சம்பவம் தொடர்காக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தார்.

காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அண்ணாதுரை, சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கண்டறிய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனை அடுத்து காவல் துறையினர் கொலை நடைபெற்ற இடங்களில் ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், வயதான தம்பதிக்கு இரண்டு வீடுகள் உள்ளன, வீட்டு வாசலில் நள்ளிரவில் தூங்கும் வழக்கம் இருந்தது என்பது தெரியவந்தது. மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சுலோச்சனா அணிந்திருந்த கம்மல், தாலிக்கொடி மட்டும் பறித்துச் சென்றதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து தம்பதி ஆதாயத்திற்காக கொலைசெய்யப்பட்டதை உறுதிசெய்த காவல் துறையினர் பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

பில் பருத்தி புத்தர் நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் பிரகாஷ்ராஜ். பாரதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ், சரவணன் மகன் ஹாரிஸ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோது தம்பதியைக் கொலைசெய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள முகேஷ் ராசிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், ஹாரிஸ் சென்னையில் உள்ள கல்லூரியில் பிபிஏ-வும் படித்துவருவது தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வீட்டில் இருந்த கல்லூரி மாணவர்கள் கூட்டாளியுடன் சேர்ந்து கிருஷ்ணன்-சுலோச்சனா தம்பதி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டுத் திட்டமிட்டு கொலைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்
பறிமுதல்செய்யப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்

இவர்கள் வயதான தம்பதியைக் கொலை செய்துவிட்டு தாலிக்கொடி, கம்மல், வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டை, மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

7.5 சவரன் நகையை அடகுவைத்து இன்பமாக ஊர் சுற்றி உள்ளனர். காவல் துறையினர் தேடுவதை அறிந்து பின் ரமேஷ் மகன் வேலவன், முருகன் மகன் சந்துரு, நாகராஜ் மகன் எழிலரசன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

வேலவன் அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய், மூன்று செல்போன்கள் வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: 'செம்மண் ஆன செமன்'- பாலியல் குற்றவாளியின் தீர்ப்பை திருத்தி எழுதிய உயர்நீதிமன்றம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.