ETV Bharat / state

'இருளில் இருந்த எங்களுக்கு ஒளி கிடைத்துள்ளது'- சித்தேரி மலை கிராம மக்கள் மகிழ்ச்சி! - சித்தேரி கிராமத்திற்கு செல்போன் வசதி

தருமபுரி மாவட்டம் சித்தேரியிலுள்ள 62 மலைக் கிராமங்களுக்கு செல்போன் டவர் வசதியை அப்பகுதியின் மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதனால் மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/12-November-2022/16909461_sitheri.mp4

author img

By

Published : Nov 12, 2022, 7:29 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியைச் சுற்றி 62 மலைக் கிராமங்கள் உள்ளன. வருடம் 2022ஐ கடந்து விட்டாலும் 1800 காலக்கட்டங்களில் தான் இன்னும் அப்பகுதி மலைக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், தெருவிளக்கு, மருத்துவம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த 62 கிராம மக்களுக்கு செல்போன் டவர் வசதியை தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இதுகுறித்து அக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலை கிராமங்களை சேர்ந்த ஒருவர் ”சித்தேரி ஊராட்சியில் 62 கிராமங்கள் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் உள்ளது. இங்கு செல்போன் டவர் பிரச்சனை அதிகமாக இருப்பதால் தொழில் எதுவும் இல்லை . சாலை வசதி பிரச்சினையாக உள்ளது. சாலை வசதி ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் உள்ளது மற்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எங்கள் பிரச்சனையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

செல்போன் சிக்னல் பிரச்சனையால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வழி கல்வியில் கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற முடியாத சூழ்நிலை நிலவியது. இருண்டு கிடந்த கிராமத்திற்கு ஒளி கிடைத்தது போல செல்போன் டவர் சேவை கிடைத்தது கிராம மக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

’லவ் டுடே’ இவானா புகைப்படத் தொகுப்பு..!

இதேபோல் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சண்முகம் பேசும்போது, “கலசபாடி கிராமத்திற்கு முதன்முறையாக ஜியோ டவா் அமைத்து கொடுத்துள்ளார்கள் அதனால் மகிழ்ச்சி அடைகிறோம். கிராமத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளிட்ட 17 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். சித்தேரி ஊராட்சியில் 5 தார் சாலைகள் அமைக்க வனத்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக இப்பகுதிகளுக்கு தார்சாலை அமைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: 'நாம ஜெயிச்சிட்டோம் மாறா' - 62 மலை கிராம மக்கள் நெஞ்சில் பால் வார்த்த தருமபுரி எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.