கிருஷ்ணகிரி: தளி காவல்நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவரை காவல்துறையினர், தர்மபுரி மாவட்ட சிறைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, காவலர்களைத் தள்ளிவிட்டு கைவிலங்குடன் அவர் தப்பி ஓடியுள்ளார். கொலைக் கைதி தப்பியோடியதை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர்.
சுமார், ஒருமணி நேர தேடுதலுக்குப் பின், தப்பி ஓடியவரை லெப்ரசி காலனி பகுதியில் இருப்பதை அறிந்து தருமபுரி நகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: சாலையில் கையேந்தும் காவலர்; வேடிக்கை பார்க்கும் காவல் அலுவலர்!