ETV Bharat / state

தருமபுரியில் விளைநிலங்களில் ரவுசுகாட்டும் ஒற்றை காட்டுயானை - களமிறங்கிய 'கும்கி' சின்னத்தம்பி! - elephant news

தருமபுரியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானையைப் பிடிப்பதற்காக "சின்னத்தம்பி என்ற கும்கி" யானையை வனத்துறையினர் வரவழைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒற்றை யானையை பிடிக்க களமிறங்கும் கும்கி யானை

author img

By

Published : Feb 3, 2023, 7:47 PM IST

தருமபுரியில் விளைநிலங்களில் ரவுசுகாட்டும் ஒற்றை காட்டுயானை - களமிறங்கிய 'கும்கி' சின்னத்தம்பி!

தருமபுரி: பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி சுற்று வட்டார விவசாயப்பகுதிகளில் 2 மாதங்களாக ஒற்றை யானை விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறையினா் ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டைத் தடுப்பு வனக்காவலர்களைக் கொண்டு வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த ஒற்றை யானையைப் பிடிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும் கட்சியின் அமைப்புகளும் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வனப்பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானையினை பாப்பாரப்பட்டிக்கு வனத்துறை அதிகாரிகள் சரவணன், வின்சன், தருமபுரி மாவட்ட வன அலுவலா் அப்போலோ நாயுடு, பாலக்கோடு ரேஞ்சர் நட்ராஜ் ஆகியோர் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர். பாப்பாரப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வரும் அந்த ஒற்றை யானையை பிடிப்பதற்காக இந்த யானை வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பேசும் போது, "தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் கூட்டமாக வந்து செல்கின்றன. ஆனால், இந்த ஒற்றை யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாயப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. ஆகையால், ஒற்றை யானையை விரட்ட இன்று ஆனைமலைப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானையை இன்று பாப்பாரப்பட்டிக்கு கொண்டு வந்துள்ளோம். கூடிய விரைவில் சின்னத்தம்பி என்ற கும்கி யானையை வைத்து ஒற்றை யானையை பிடித்து விடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உங்க வீட்டில் கன்னுக்குட்டி இருக்கா? - கட்டாயம் இதைப் படிங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.