ETV Bharat / state

மஞ்சப்பை விருதில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி - குவியும் பாராட்டுகள்! - Department of Environment and Climate Change

தமிழக அளவில் மஞ்சப்பை விருதில் முதலிடம் பெற்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மஞ்சப்பை விருதில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி

author img

By

Published : Jun 7, 2023, 11:00 PM IST

மஞ்சப்பை விருதில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி

தருமபுரி: தமிழக அளவில் மஞ்சப்பை விருதில் முதலிடம் பெற்ற தனியார் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் தருமபுரியில் ஏரியில் சிறுவர் பூங்கா அமைத்து, அதனை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டார்.

இதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும், சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சிறந்த பள்ளிகள் 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூபாய் 10 லட்சமும், இரண்டாம் பரிசாக 5 இலட்சமும், மூன்றாம் பரிசாக மூன்று லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை தங்களது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் தூய்மையாக பராமரித்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், பேரூராட்சிகள், பள்ளிக் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் 5000 மஞ்சப்பைகளை விநியோகம் செய்து, பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்துள்ளனர்.

இதனால் தருமபுரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தமிழக அரசின் மஞ்சப்பை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தருமபுரி கல்லூரிக்கு முதல் பரிசும், பத்து லட்சத்திற்கான காசோலையினையும் தாளாளர் கோவிந்தனுக்கு வழங்கி பாராட்டினர். தொடர்ந்து மாநில அளவில் முதல் பரிசை வென்று வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் கோவிந்தன், பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையை தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தியிடம் வழங்கி வாழ்த்துக்களைப் பெற்றார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சாந்தி, இலக்கியம்பட்டி ஏரி பகுதியை பராமரித்து சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை பராமரிக்கும் பணியினை தங்கள் கல்லூரியுடன் இனைந்து பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு கல்லூரி தாளாளருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பசுமை ஆசிரியர் சங்கர், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மகேந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் லாவண்யா மற்றும் அலுவலர்கள் தங்கதுரை மற்றும் வேதமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இடம், தேதி குறிச்சாச்சு.. 10, +2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.