கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணையிலிருந்து வினாடிக்கு நான்கு ஆயிரத்து 469 கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு ஏழு ஆயிரத்து 245 கனஅடி நீரும் காவிரி ஆற்றில் கர்நாடக வெளியேற்றி வருகிறது.
காவிரி கரையோர பகுதியில் பெய்த மழை காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
நேற்று ஒகேனக்கல் நீர்வரத்து ஒன்பது ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று (செப்.14) ஐந்து ஆயிரம் கனஅடி நீராக உயர்ந்து 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: எலிவால் அருவியில் நீர்வரத்து...!