தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிமுக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அதன்படி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோடல்பட்டி, மலைக் கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா வெள்ளாடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 170 பயனாளர்களுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 20 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல் வழங்கினார்.
இது குறித்துப் பேசிய கிராம மக்கள், கோடல்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கரோனா காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிவருகின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு விலையில்லா வெள்ளாடு வழங்கப்பட்டுள்ளது. ஆடுகளை வளர்த்து இதன் மூலம் வருவாயைப் பெருக்க வழிவகை ஏற்படுத்தித் தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.