ETV Bharat / state

பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி குடும்ப திருமண விழா: முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களுக்கு நேரில் வாழ்த்து! - ஜிகே மணி

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணி குடும்ப திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஜிகே மணி குடும்ப திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர்

author img

By

Published : Feb 16, 2023, 9:39 AM IST

ஜிகே மணி குடும்ப திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர்

தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணியின் தம்பி ஜி.கே.முத்துவின் மகள் சுதாகுமாரி – இன்பரசன் திருமணவிழா தருமபுரி ஆட்டுக்காரன் பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சேலத்தில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (பிப்.15) இரவு 9 மணி அளவில் சேலத்திலிருந்து புறப்பட்டு தருமபுரி வந்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், லைக்கா சிஇஓ தமிழ் குமரன், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி எம்.பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாதிக் கலவரம் ஏற்படக் விடக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.