தருமபுரியில் அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கு அருகில் கால்வாய் ஒன்று உள்ளது. இது மதிகோன்பாளையம் அருகில் சனத்குமார் நதியில் இணைகிறது. கடந்த சில நாட்களாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து கழிவுநீர் தேங்கி வகுப்பறைகள் அருகே சூழ்ந்துள்ளது.
இதனால் கடுமையான தூர்நாற்றம் வீசுதால், வகுப்பறைகளில் மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாணவிகளுக்கு இந்த தூர்நாற்றம் ஒம்பாமல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி பள்ளிக்கு வரமுடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதை சுத்தம் செய்ய வலியுறுத்தி பள்ளி தரப்பில் நகராட்சி, பொதுப்பணித்துறையிடம் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்காமல், கால்வாயை தூர்வாரி, தூர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு, பள்ளி மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.