ETV Bharat / state

'சில ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு தரகர்களாக செயல்படுகின்றன..!' - அன்புமணி காட்டம்

தருமபுரி: "பாமக கூட்டணி குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருகிறது. சில அரசியல் கட்சிகளுக்கு ஊடகங்கள், தரகர்களாக செயல்படுகின்றன" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார்.

author img

By

Published : Feb 5, 2019, 5:35 PM IST

2

பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தருமபுரி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி குறித்து வரும் தகவல்கள் பொய்யானது. செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மட்டுமே தெரிவித்தேன். யாருடன் கூட்டணி, எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிவிக்கவில்லை.

சில ஊடகங்களில் திமுகவுடன் கூட்டணி என்றும், சில ஊடகங்கள் அதிமுகவுடன் கூட்டணி என்றும், எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நானோ, மருத்துவர் ராமதாஸோ, எங்கள் கட்சியை சார்ந்தவர்களோ கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பட்சத்தில் எங்களிடம் உறுதிப்படுத்தாமல் தயவுசெய்து கூட்டணி குறித்து செய்தி போடாதீர்கள். அப்படியே போட்டீர்கள் என்றால் உங்களுடைய பத்திரிகை மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.

1
undefined

ஊடகங்களுக்கு தர்மம், நியாயம் என்பது இருக்கிறது. ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு தரகர்களாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம்", என்றார்.

Intro:கூட்டணி குறித்த கேள்விக்கு கோபப்பட்டு அன்புமணி ராமதாஸ்

Body:ஊடகங்கள் பாமக கூட்டணி குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறது தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Conclusion:தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்த கேள்விக்கு கோபப்பட்ட அன்புமணி ராமதாஸ் ஊடகங்கள் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி பொய்யான கருத்து க்களை பரப்பி வருகிறது என பாய்ச்சல்....               பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ்   ஒருசில ஊடகங்களில் கூட்டணி குறித்து பொய்யான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஊடகங்களுக்கு ஊடக தர்மம் நியாயம் என்பது இருக்கிறது. இது ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல் கட்சிகளுக்காக தரகர்களாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். கூட்டணியை பற்றியோ யாருடன் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது  பற்றியும் யாருடன்  பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றியும் நானோ மருத்துவர் அய்யாவும் எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் அதிகாரப்பூர்வமாக யாரும் சொல்லாத பட்சத்தில் எங்களைப்பற்றி வரும் தகவல் பொய்யானது. வேண்டுமென்று ஒரு சில செய்தித் தாள்களிலும் ஒரு சில வார இதழ்களிலும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களில் பொய்யான செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்திக் கொள்ளுங்கள்  இது நல்லது கிடையாது .அதுவும் ஒரு சில பத்திரிகைகள் பாரம்பரியமான பத்திரிகைகள் ஒரு சில பத்திரிகைகள் நேர்மைக்கு  பெயர்போன  பத்திரிகைகள் இனியும் இதுபோன்ற செய்திகளை எங்களிடம் உறுதிப்படுத்தாமல் தயவுசெய்து போடாதீர்கள் .அப்படியே போட்டீர்கள் என்றால் உங்களுடைய பத்திரிகை மீது மக்கள்  நம்பிக்கை இழப்பார்கள். என் அன்பான வேண்டுகோள் என்று தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ்.அன்புமணியாகிய  என்னுடைய அன்பான வேண்டுகோள்.நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மட்டுமே தெரிவித்தேன்.யாருடன் கூட்டணி எந்த கட்சியுடன் கூட்டணி என்று கூட தெரிவிக்கவில்லை.சில ஊடகங்களில் திமுகவுடன் கூட்டணி சில ஊடகங்கள் திமுகவுடன் கூட்டணி ஒரு சில செய்தித் தாள்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. செய்திகளை வெளியிடும்போது தங்கள் தரப்பை கேட்டு உறுதிப்படுத்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.கூட்டணி குறித்து பாமக தரப்பில் அறிவிக்கும் வரை அனைத்து கூட்டணி குறித்த செய்திகள் பொய்யானவை என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.