கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாரதிபுரம் 66 அடி சாலையில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான பான்மசாலா விற்பனைசெய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அது மட்டுமின்றி, மளிகைக் கடையில் பொருள்களை அதிக விலைக்கு விற்பனைசெய்யப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சுகுமார் மளிகைக்கடைக்குச் சீல்வைத்தார்.
இதையும் பார்க்க: ஊரடங்கு; பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்!