ETV Bharat / state

விவசாயி தீக்குளிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்ற அழுத்தம் கொடுத்தது யார்? - திமுக எம்பி கேள்வி

தருமபுரி: அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற அழுத்தம் கொடுத்தது யார்? என மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்களை உறுப்பினர் செந்தில்குமார்
மக்களை உறுப்பினர் செந்தில்குமார்
author img

By

Published : Sep 6, 2020, 3:46 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிட்டேசம்பட்டியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால் அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினரும், காவல் துறையினரும் செப்டம்பர் 4ஆம் தேதி சென்றனர். அப்போது அலுவலர்களுக்கும், ஆக்கிரமிப்பு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விவசாயி சின்னசாமி(65) என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதையடுத்து அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, நேற்று (செப்.5) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அவர், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மரண வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், சின்னசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினர் அகற்றுவது நல்ல விஷயம். அதை கரோனா பரவல் சூழலில் அகற்ற காரணம் என்ன?.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள். இந்த நிலம் சம்பந்தமான வழக்கு பாலக்கோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காரிமங்கலத்தில் குறிப்பிட்ட நபருக்காக வருவாய்த் துறையினர் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தருமபுரியில் ஏரிமலை, கோட்டூர்மலை, சித்தேரி, கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களில் 70 ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை.

அதற்கெல்லாம் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் 70 ஆண்டுகளாக மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்கிறார்கள். இதுபோன்ற விவசாய நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும்.

மக்களவை உறுப்பினர் செந்தில்குமார்

அலுவலர்களின் அடவடியால் விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் இருக்கிறது. அமைச்சர் கே.பி. அன்பழகன் சின்னசாமி குடும்பத்தினருக்கு எதுவும் செய்யவில்லை. கரோனா காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை வட்டாட்சியர் எடுக்காமல், அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வந்துள்ளார். இதற்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.