ETV Bharat / state

4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு... தருமபுரி பள்ளி மாணவர்கள் சாதனை..! - seed balls

25 Lakh Seed Balls: காடுகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் வகையில் தருமபுரியில் நான்கு மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தருமபுரியில் 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் சாதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 11:04 PM IST

தருமபுரியில் 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் சாதனை

தருமபுரி: காலநிலை மாறுபாடு, பருவ நிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்தல், ஒரு சில இடங்களில் அதிக மழைப்பொழிவு, அதிக பனிப்பொழிவு உள்ளிட்டவை, காலநிலை மாறுபாடு காரணமாக நிகழ்கிறது.

இதற்கு காடுகள் அழிப்பு மற்றும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளே முக்கிய காரணம். எனவே, 33 சதவீத காடுகளை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காடுகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, வனத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தருமபுரி பச்சமுத்து கல்வி குழுமங்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 3.5 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்வி குழுமங்களின் தாளாளர் பாஸ்கர், மரம் வளர்ப்பதன் அவசியத்தை பள்ளி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளைக் கொண்டு விதைப்பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டார்.

பின்னர் அதை செயல்படுத்தும் விதமாக இன்று (நவ. 9) மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் விதைப்பந்து திருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தார். அந்த வகையில், மாணவர்கள் பங்கு பெரும் இந்த விதைப்பந்து தயாரிப்பு திருவிழாவினை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

இந்த விதைப்பந்து தயாரிப்பு திருவிழாவில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 10 ஆயிரம் போ் கலந்து கொண்டு நான்கு மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து புதிய உலக சாதனை படைத்தனர். மேலும், விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி புதிய உலக சாதனை நிகழ்ச்சியாக அமைந்தது.

இந்த சாதனையை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட எலைட் வேல்ட் ரெக்கார்ட் பதிவு செய்து, உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியது. இச்சாதனை நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சினேகா கலந்து கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு விதைப்பந்துகளை தயார் செய்தார்.

மேலும் அவர், சக மாணவிகளோடு தானும் விதைப்பந்துகளை தயாரித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். இதில் ஆல், அரசு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் மற்றும் பூவரசு போன்ற விதைகளால் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகள், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என கல்விகுழும தலைவா் பாஸ்கா் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தன் அரசியல் வாழ்வில் முதன் முறையாக அதிமுக கொடி இன்றி பயணித்த ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.