ETV Bharat / state

சோலைவனத்தில் செழித்து வளரும் பாலைவனப் பயிர்: அசத்தும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பாலைவனத்தில் விளையும் பயிரான பேரீச்சையை வெற்றிகரமாகச் சாகுபடி செய்தது வியாபாரிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
author img

By

Published : Jun 22, 2021, 10:01 AM IST

தர்மபுரி: பாலைவனப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பேரீச்சையை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாகுபடி செய்துவருகிறார்.

பேரீச்சை சாகுபடி

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வேல்முருகன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடை வேளாம் நிலத்தில் பேரீச்சை சாகுபடி செய்ய நினைத்துள்ளார். இதையடுத்து, அரியாகுளம் பகுதியில் உள்ள நிஜாமுதீன் என்பவரிடம் 90 திசு வளர்ப்பு பேரீச்சை நாற்றுகளை வாங்கியுள்ளார்.

பழுத்து தொங்கும் பேரிச்சம்பழம்
பழுத்துத் தொங்கும் பேரிச்சம்பழம்

பேரீச்சை ரகங்கள்

அதனை தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடையிடையே நடவுசெய்துள்ளார். இதற்காக, சொட்டு நீர்பாசனத்தைத் தேர்ந்தெடுத்த இவர், பேரீச்சையில் தரமானதாகக் கண்டறியப்பட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், இலைட் ஆகிய ஏழு ரகங்களைப் பயிரிட்டுள்ளார். தற்போது இவை தரைமட்டத்திலிருந்து 2 அடி உயரத்தில் பேரீச்சை மரத்தில் கொத்து கொத்தாக பேரீச்சை காய்த்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.

பேரீச்சை மரம்
பேரீச்சை மரம்

நல்ல லாபம் தரும் பேரீச்சை சாகுபடி

பேரீட்சை சாகுபடி குறித்து பேசிய வேல்முருகன், "இதே மாவட்டத்தில் அரியக்குளம் கிராமத்தில் நிஜாமுதின் என்பவர் பேரீச்சை சாகுபடி செய்துவருகிறார். அனுபவம் வாய்ந்த அவரிடம் ஆலோசனை பெற்று, அவர் மூலமாகவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கினேன்.

கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் பேரீச்சை
கொத்துக்கொத்தாக காய்த்து தொங்கும் பேரீச்சை

இந்தாண்டு முழு மூச்சாக விவசாயத்தில் கவனம் செலுத்தினேன். சரியாகத் திட்டமிட்டதால் தற்போது பேரீச்சை சாகுபடி மூலமாக வருவாய் கிடைக்கிறது. தென்னை சாகுபடியில் மரம் ஒன்றுக்கு ஆண்டு வருவாயாக 800 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதே பேரீச்சை சாகுபடியில், மரம் ஒன்றுக்கு 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்" என்றார்.

பேரீச்சை சாகுபடியில் அசத்தும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்

பேரீச்சை சாகுபடியில் தனித்துவம் காட்டும் தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அரியகுளம், அரூர், காரிமங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஈராக், சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் விளையும் பேரீச்சை பழத்தை பரவலாகச் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்: ஆப்பு வைத்த ஜிபிஆர்எஸ் கருவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.