தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த இளம்பெண் பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரி பணியாற்றினார். அவர் குட்டூர் பகுதியைச் சேர்ந்த தாய்மாமன் தங்கவேல் மகன் முரளிதரன் என்பவரை காதலித்தார். கடந்த 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்த சூழலில் முரளிதரன் ஜார்க்கண்ட்டில் பணிபுரிகிறார்.
இவர்களின் 13 வருட காதலுக்கு முரளிதரனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் தனது காதலனிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், தனக்கு வீட்டில் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சய ஏற்பாடுகள் நடைபெறுவதாக முரளிதரன் கூறினார்.
விஷமருந்திய பெண்
சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் இளம்பெண்ணின் தம்பிக்கு திருமணம் நடந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் மீண்டும் அப்பெண் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு முரளி மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த அப்பெண் ஆன்லைனில் விஷ மருந்து வாங்கினார். அதனையடுத்து முரளிதரன் வீட்டுக்கு சென்று அங்கு அந்த விஷ மருந்தை சாப்பிட்டார். இதனைப் பாரத்த முரளிதரனின் பெற்றோரும், உறவினர்களும் கதவை தாழிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த இளம்பெண் வீட்டார் விஷமருந்திய பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக மரணம்?
மேலும், விஷம் குடித்ததை பார்த்த முரளிதரனின் குடும்பத்தினர் பெண்ணை காப்பாற்றாமலும், யாருக்கும் தகவல் கொடுக்காமலும் இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் அப்பெண்ணின் இறப்பை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உறவினர்களின் ஆர்ப்பாட்டம்
இதனை அறிந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முரளிதரன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது மற்றும் கடந்த 13 ஆண்டுகளில் இருவரும் பழகியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
எனவே காவல் துறையினர் முரளிதரன் மீதும் அவரது குடும்பததினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.
சமூகத்தில் பெண்கள் முட்டி மோதி மேலே வந்துகொண்டிருக்கும் சூழலில் காதலில் தோல்வியடைந்தால் உடனடியாக மரணத்தை தேடிக்கொள்ளும் எண்ணத்தை பெண்கள் மட்டுமின்றி யாருமே செய்யக்கூடாது என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற தற்கொலை எண்ணங்கள் முன்னேறி கொண்டிருக்கும் பெண் சமூகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் எனவும் அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.