கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களைக் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்களிடம் நேரடியாக தொடர்புகொள்ளும், பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போதைய நாள்கள் பெரும் சவாலாகவே உள்ளது. மேலும், காவல் துறையினர் பல்வேறு இடங்களில் பணிபுரிவதால் அவர்களுக்கு கரோனா அச்சுறுத்தல் பெரிதாகவே உள்ளது.
இந்நிலையில், தருமபுரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில், நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் 80 காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினா். இதனைத் தொடர்ந்து, 28 காவல் நிலையங்களுக்கும் படிப்படியாக முகக்கவசங்களை விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட பார்: சீல் வைத்த கலால் துறையினர்