தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று நகராட்சி விநியோகம் செய்கிறது.
அந்தவகையில், நகராட்சிக்கு உட்பட்ட 32ஆவது வார்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அப்போது, ஒரு பகுதி மக்கள் மட்டும் தண்ணீரை முழுவதுமாக பிடித்துக்கொள்வதாகவும், மற்றொரு பிரிவு மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
![Public fighting due to water probe in dharmapuri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-15-watterproblem-img-7204444jpg_15062019190452_1506f_1560605692_1058.jpg)
இதனால், இரு தெரு மக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதையடுத்து, இந்த இரண்டு தெருக்களின் மக்களும் பயனடையும் வகையில், பெரிய அளவிலான வால்வை அமைத்து ஒவ்வொரு தெருவிற்கும் ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.