ETV Bharat / state

விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்த 10 பேர் மீது வழக்கு

தருமபுரி: காரிமங்கலம் அருகே விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்த 10 பேர் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Prosecution of 10 persons for threatening to kill a farmer

author img

By

Published : Nov 20, 2020, 5:58 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் அண்ணாமலைஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். 58 வயதான இவர் விவசாயம் செய்துவருகிறார்.

இவர் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பட்டா நிலத்திலும் 30 சென்ட் கோயில் நிலத்திலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், அறிவு, விஸ்வநாதன், சரவணன், சுரேஷ் உள்ளிட்ட பத்து பேர், "எங்களின் உறவினர் நிலத்தில் நீ ஏன் விவசாயம் செய்கிறாய்?" என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் சேதப்படுத்தியும், அப்பகுதியில் அமைந்துள்ள கோயில் நந்தி மற்றும் லிங்க சிலைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, நிலத்தை சேதப்படுத்தியோர் குறித்து மாரியப்பன் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துறையினா் பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 21 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.