தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியைச் சார்ந்தவர் செட்டியப்பன். இவரது மகன் வினித். மேட்டூர் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார்.
இவர், ஆன்லைனில் சூதாட்டத்திற்கு அவரது தாயிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவரது தாய் மறுக்கவே, வீட்டிலிருந்து வெளியேறி அப்பகுதியிலுள்ள ஆசாரி திட்டு எனும் இடத்தில் தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், அங்கு வந்த போலீசார் செட்டியப்பன் உடலை மீட்டு உடற்க்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் எனும் சவக்குழி; தப்பிக்க வழி என்ன?