தருமபுரி மாவட்டம் இருமத்தூர் அருகே உள்ள கால்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது (52). விவசாய தொழில் செய்து வரும் இவர், கம்பைநல்லூர் செல்லும் வழியில் கால்சனூர் கோயில் அருகில் சிலர் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இதற்கிடையே, கம்பை நல்லூர் காவல் நிலையத்திற்கு கோயில் அருகே சிலர் சூதாட்டம் விளையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்ய சென்றபோது சூதாட்ட கும்பல் காவலர்களைக் கண்டு தப்பி ஓடியது. அப்போது, மாதுவை காவலர்கள் தூரத்தியதால் அவர் தப்பி ஓட முயன்றபோது எதிர்பாராத விதமாக அருகே இருந்த விவசாய கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மாதுவின் உறவினர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மாதுவின் உறவினர்களை சமாதானம் செய்து நள்ளிரவில் கிணற்றிலிருந்து மாதுவின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு!