ETV Bharat / state

காணாமல் போன 6 வயது சிறுவன் தண்ணீர் டேங்கில் சடலமாக மீட்பு.. 17 வயது சிறுவன் கைது.. தருமபுரியில் நடந்தது என்ன?

author img

By

Published : Jul 19, 2023, 1:49 PM IST

Updated : Jul 19, 2023, 3:28 PM IST

தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமத்தில் 6 வயது சிறுவன் காணாமல் போன விவகாரத்தில், சிறுவனின் உடல் அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dharmapuri
தருமபுரி

தருமபுரி: கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புழுதிகரை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் - சுதா தம்பதியினருக்கு மதியரசு(6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகன் உள்ளனர். ஆதிமூலம் ஜேசிபி ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி முதல் சிறுவன் மதியரசு காணவில்லை என கிராமத்தில் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

பின்னர், சிறுவனை காணவில்லை என கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகாரை பெற்றுக் கொண்ட கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த சிறுவன் மதியரசுவை கொலை செய்து அருகில் காட்டம்பட்டி அருகே உள்ள அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சடலமாக போட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், கொலை செய்யப்பட்ட சிறுவனும் அடிக்கடி சேர்ந்து கொண்டு விளையாடி வந்ததாகவும், சம்பவத்தன்று சிறுவனை ஆசை வார்த்தை கூறி, அருகில் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது அழைத்துச் சென்று உள்ளே இறங்கி, சிறுவனின் கை, வாயை கட்டி வைத்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவனை வெளியில் விட்டால், நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விடுவார் என்ற எண்ணத்தில் கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் இறந்ததை உறுதி செய்தவுடன், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி சென்றது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் சிறுவனின் உடலை வாங்க மறுத்ததோடு, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்போது, "இந்த கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியாது. இதில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம். எனவே உரிய விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" கூறினர்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் போராட்டக்காரர்களை அழைத்துச் சென்று எஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிறுவனின் உடலை நேரில் பார்த்துவிட்டு, அதன் பிறகு தான் உடலை வாங்குவது குறித்து முடிவு செய்யவோம் என்று கூறிய உறவினர்கள் தருமபுரி மருத்துவமனைக்கு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் உறவினர் கடத்தல் - திருவள்ளூரில் நடந்தது என்ன?

Last Updated : Jul 19, 2023, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.