ETV Bharat / state

பெண்ணின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டவர் கைது - காவல்துறை விசாரணை - பெண்ணின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்ட நபர் கைது

தருமபுரி: பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொலியை முகநூலில் பதிவு செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Police arrest man for posting pornographic images of woman on Facebook

author img

By

Published : Dec 21, 2020, 9:38 PM IST

தருமபுரி அடுத்த அன்னசாகரத்தைச் சார்ந்த சசிக்குமார் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சசிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்திப்பதும், வெளியில் செல்வதுமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வெளியூர் சென்ற இருவரும் தனியாக இருக்கும் பொழுது ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்களை சசிகுமார் தனது செல்போனில் எடுத்துள்ளார். மேலும் மதுவுக்கு அடிமையான சசிகுமார் அடிக்கடி அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாரை விட்டு அப்பெண் விலகிச் சென்றுள்ளார். இந்நிலையில் சசிக்குமார் அடிக்கடி அப்பெண்ணை தொடர்பு கொண்டு, உன்னுடைய ஆபாச படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அப்பெண் இதனை கண்டு கொள்ளாததால், இருவரும் தனியாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட ஆபசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தும், தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை செய்து வந்த, காவல் துறையினர் பெங்களூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சசிகுமாரை பிடித்து, அவரது முகநூல் கணக்கில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகளையும் நீக்கினர். மேலும் சசிக்குமாரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்! - மாணவி, தந்தை பாஸ்போர்ட்டை முடக்க திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.