ETV Bharat / state

‘குரங்கு கையில் பூமாலை போல் ஸ்டாலின் கையில் திமுக’ - அன்புமணி விமர்சனம்! - மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: குரங்கு கையில் பூமாலை உள்ளது போல், திமுக மு.க. ஸ்டாலின் கையில் மாட்டிக்கொண்டுள்ளது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

PMK Anbumani Ramadoss Criticize DMK Stalin
author img

By

Published : Nov 4, 2019, 8:17 PM IST

Updated : Nov 4, 2019, 9:15 PM IST

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முப்படை உறுப்பினர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், கட்சியினர் மத்தியில் பேசினார்.

அதில், “எனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்தால் கல்வி, பொருளாதாரம், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கொண்டு வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில் வியூகம் பொருத்து கூட்டணி அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு

மேலும் பேசிய அவர், குரங்கு கையில் பூமாலை இருப்பது போல், திமுக ஸ்டாலின் கையில் மாட்டிக்கொண்டுள்ளது என்றும், ஸ்டாலினுக்கு தலைமை பண்பே கிடையாது எனவும் விமர்சித்தார்.

இதையும் படிங்க... ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ - பாஜகவிற்கு ஸ்டாலின் பதிலடி!

Intro:tn_dpi_01_pmk_anbumaniramadoss_speech_vis_7204444Body:tn_dpi_01_pmk_anbumaniramadoss_speech_vis_7204444Conclusion:உள்ளாட்சி தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியோடு தேர்தலை சந்திக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் அப்போதைய வியூகத்தின் அடிப்படையில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முப்படை உறுப்பினர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கட்சியினர் மத்தியில் பேசினார்.அவர் பேசும்போது தனக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்தால் கல்வி .பொருளாதாரம் .விவசாயம்.மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கொண்டு வருவேன் என்றும் கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் பாமக வெற்றி பெற முடியவில்லை.முப்படையை சோ்ந்தவா்கள் பொதுமக்களிடம் சாதி. மதம். கட்சி பார்க்காமல் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மக்களுக்கு கொண்டுவந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவரிடம் ஒரு முறை வாய்ப்பு கேட்க வேண்டும்.தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை விவசாயிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மக்களும் மாற்றத்திற்கான ஏக்கத்தில் இருக்கிறார்கள் . சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால் நகை கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று தெரிவித்தார் இதனை நம்பி பலரும் தாங்கள் நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு தற்போது கடன்காரர்கள் ஆக தவித்து வருகிறார்கள் அது போன்ற வாக்குறுதிகளை பாமக அளிக்க வில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேறு வகையான வியூகம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம் என்றும் அதற்கு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அப்போதைய வியூகத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்
Last Updated : Nov 4, 2019, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.