ETV Bharat / state

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ ஆட்சியரிடம் மனு!

தருமபுரி: மணல் கொள்ளையை தடுக்கக் கோரி திமுக முன்னாள் எம்பி தாமரை செல்வன், சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

MP Thamarai Selvan Petition To Collector

author img

By

Published : Jul 17, 2020, 10:08 PM IST

Updated : Jul 18, 2020, 8:49 AM IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சின்னாறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கனிம விதிகளுக்கு புறம்பாகவும், சட்டவிரோதமாக சுமார் 20 முதல் 50 அடிகள் குழித்தோண்டி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியில், இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மணல் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட கனிமவளத்துறை அலுவலரின் கையொப்பம் கூட இல்லாமல் ஒரு சிலர் மணல் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் திமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் தாமரை செல்வனிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மணல் கொள்ளை நடைபெறும் பகுதியை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மணல் கொள்ளை நடைபெற்று வருவதை அவர் உறுதி செய்தார்.

பின்னர், திமுக சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன் இணைந்து மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: நாயைப் பிடித்து விழுங்க முயன்ற மலைப்பாம்பு! மக்கள் அலறி ஓட்டம்!

Last Updated : Jul 18, 2020, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.